Friday 19 October 2012

பிள்ளைகளில் கல்வி கற்க்கும் ஆர்வத்தைத் தூண்ட ஒரு வழி: பொருத்தமான படங்களைச் சுவரில் தொங்க விடுதல்


பொருத்தமான படங்களைச் சரியான இடங்களில் மாட்டுவதன் மூலம் பிள்ளைகளில் கல்வி கற்க்கும் ஆர்வத்தைத் தூண்டலாம்.
சாதாரணமாகப் பொருட்கள் வாங்குவதற்க்காக் கடைக்குச் சென்றபோது எதேச்சையாகக் கண்ணில் பட்டது இந்த உலகப் படம்.  அது விலை கூடிய பொருளாகவும் எனக்குத் தெரியவில்லை.  எனவே உடனேயே வாங்கிவிட்டேன்.  வீட்டிற்க்கு வந்தவுடனே முதல் வேலையாக இந்த உலகப் படத்தை பொருத்தமான சுவர் ஒன்றிலே மாட்டி விட்டேன்.  படத்தை மாட்டியவுடன் என் 9 வயது மகனின் நடத்தையில் அதிக மாற்றங்களை அவதானித்தேன்.  அவர் அதிக நேரத்தை இந்தப் படத்தின் முன் செலவிடுகின்றார்.  இந்தப் படத்தில் இருந்து என்னென்ன அறிவை எல்லாம் பெற்றுக் கொள்ள முடியுமோ அவற்றை எல்லாம் தன்னிச்சையாகப் பெற்றுக்கொள்கின்றார்.  அந்தப் படத்தைப் பார்த்துப் படிக்கும்படி வற்ப்புறுத்த வேண்டிய் தேவை எனக்கு ஏற்ப்பட்டது இல்லை.  தன் நண்பர்களைக் கூட்டி வைத்து போட்டி ரீதியான வினாக்கள் தொடுக்கின்றார்.  தன்னை விட வயதில் குறைவான சிறுவருக்கு படத்தைப் பற்றி விளக்கங்கள் கொடுக்கின்றார்.  மொத்தத்தில் இந்தப் படம் என் மகனினால் பூரணமாகப் பயன்படுத்தப் படுகின்றது.

இதே படம் என் தோழி வீட்டிலும் மாட்டி வைக்கப் பட்டுள்ளது.  தன்னுடய பிள்ளைகள் இந்ந்தப் படத்தினால் பயன் பெறுவது இல்லை என்று குறைப்பட்டதை அறிந்து அவர் வீட்டிற்க்குச் சென்றேன்.  தோழியின் குறைக்கான காரணத்தையும் அறிந்தேன்.  தோழி வீட்டில் உள்ள படத்திலோ அல்லது தோழியின் பிள்ளைகளிலோ குறை ஒன்றும் இருக்கவில்லை.  ஆனால் படம் மாட்டப் பட்டிருந்த விததில் தான் குறை இருந்தது.  படம் மிவும் உயரமான இடத்தில் மாட்டப் பட்டிருந்தது.

பிள்ளைகளின் கல்விச்செயற்ப்பாட்டைத் தூண்டக்கூடிய படங்களை மாட்டும் போது கவனிக்க வேண்டிய குறிப்புக்கள்
1.  படங்களின் மீது போதிய அளவு வெளிச்சம் படத்தக்கதாக இருக்க வேண்டும்.
2.  படங்கள் பிள்ளைகளின் கண்ணுக்கு எட்டிய உயரத்தில் மாட்டப் பட்டிருக்க வேண்டும்.
3.  படங்கள் வீட்டின் ஏதோ ஒரு மூலையில் மாட்டப் படாமல் பிள்ளைகள் அதிகம் நடமாடுகின்ற இடங்களில் மாட்டப்படவேண்டும்.

படங்களை இவ்வாறு மாட்டும் போது பிளைகள் தன்னிச்சையாகவே அவற்றால் ஈர்க்கப் பட்டு தம் கல்வி அறிவை வளர்த்துக் கொள்வார்கள்.  பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து இவ்வாறான படங்களை ஆராச்சி செய்து கலந்துரையாடும் போது பிள்ளைகள் அதிக பலன் பெறுவார்கள்.

இங்கே நான் காட்டிநது ஓர் உதாரணம் தான்.  பெற்ரோர் பிள்ளைகளின் வயதுக்கும் இயல்புக்கும் ஏற்ற படங்களை கடையில் வாங்கியோ அல்லது தாமாகவே தயாரித்தோ சுவர்களில் மாட்டலாம்.

No comments:

Post a Comment