Friday 19 October 2012

குழந்தைகளில் நல்ல மொழி வளர்ச்சியை ஏற்ப்படுத்துவது எவ்வாறு?


குழந்தைகள் தாம் பிறந்த கணத்தில் இருந்தே தமக்குரிய கல்வியைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.  எனவே மிக ஆரம்ப காலத்திலேயே பிள்ளைகளில் நல்ல மொழி வளர்ச்சி ஏற்ப்பட பெற்றோர்களால் உதவ முடியும்.  

அதற்க்கான வழிவகைகள் சில:
1.  உங்கள் குழந்தையுடன் அடிக்கடி பேசுங்கள்.  நீங்கள் பேசுவது என்னவென்று அதற்க்கு விளங்காவிட்டால் கூட குழந்தையுடன் அதிகம் பேசுங்கள்.

2.  ஆரம்ப காலங்களில் உங்கள் குழந்தை எழுப்பும் சத்தைப் பிரதி செய்யுங்கள். அது போலவே நீங்களும் சத்தமிடுங்கள்.  ஆனாலும் பிள்ளை சொற்க்களைச் சொல்ல ஆரம்பித்தவுடன் சொற்க்களைச் சரியாக உச்சரியுங்கள்.  குழந்தைகள் போலவே  “சொக்கா, பிக்கா” என்று நீங்களும் தவறாக உச்சரிக்கக் கூடாது.

3.  குழந்தையை அதனுடைய பெயரைச்சொல்லி அழையுங்கள்.  குழந்தையுடன் உரையாடும் போது அடிக்கடி அதனுடைய பெயரைப் பாவியுங்கள்.  “மலர்விழியின் போத்தல், மலைவிழியின் கட்டில், மலர்விழியின் பொம்மை”

4.  உங்கள் குழந்தை கேட்ப்பதற்க்காக இனிமையாக மகிழ்ச்சியாகப் பாடுங்கள்.

5.  குழந்தையுடன் தொடர்புடைய பொருட்களைப் பெயரைக் குறிப்பிட்டு அறிமுகப் படுத்துங்கள். ‘ போத்தல், பால், பொம்மை....’

6.  குழந்தை சிறிதளவு வளர்ந்தபின் அதனுடைய செயற்ப்பாடுகளை வார்த்தைகளாக வர்ணியுங்கள்.  “மலர்விழி ஓடுகின்றாள், மலர்விழி பாடுகின்றாள்,  மலர்விழி படம் கீறுகின்றாள்....”

7.  குழந்தையை மடியில் இருத்தி வயதுக்குப் பொருத்தமான படப்புத்தகத்தை விரித்து குழந்தையுடன் உரையாடலை வளருங்கள்.

No comments:

Post a Comment